வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் படிவம் 4 இல் புத்தாண்டு தினமான நேற்று (14.04.2018) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவருக்கிடையே இடம்பெற்ற கருத்து முரன்பாடே இச் சம்பவத்திற்கு காரணமேனவும் இச் சம்பவத்தில் காயமடைந்த சிதம்பரபுரம் கற்குளம் படிவம் -4 ஜ சேர்ந்த சசிகுமார் தியாகரட்னம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தாக்குதலை மேற்கொண்டவர் என சந்தேகிக்கப்படும் வவுனியா ஆசிக்குளம் பகுதியினை சேர்ந்த 32வயதுடைய சிங்கரம் கனகரத்தினம் என்பவரை கைது செய்துள்ளதாகவும் வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here