சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வீடு சென்றவர்களுக்கு மீண்டும் திரும்பி வருவதற்கும், உறவினர்களது வீடுகளுக்கு செல்பவர்களுக்கும் ஏதுவாக தூர பயணிகள் பஸ் சேவையை இன்று (15) முதல் நடாத்துவதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபையின் நிருவாக அதிகாரி பி.எச். ஆர்.டி.சந்திரசிறி இதனைக் கூறியுள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு இ.போ.சபையினால் திட்டமிடப்பட்ட இரண்டாம் கட்ட  விசேட போக்குவரத்துச் சேவை இன்று (15) முதல் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தூர பயணத்துக்கான ஈடுபடும் பஸ் சேவைகளில் குறுகிய தூர பயணிகளையும் ஏற்றிச் செல்லுமாறும் பஸ் சாரதி மற்றும் நடாத்துனர் ஆகியோரிடம் நிருவாக அதிகாரி விசேட வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here