பொகவந்தலாவ கெம்பியன் பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் இருந்து 70 மதுபான போத்தல்கள் ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸாரினால் மீட்பட்டுள்ளதோடு ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (13) மாலை 06 மணி அளவில் குறித்த சந்தேக நபர் கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொகவந்தலாவ கெம்பியன் பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அனுமதி மத்திரம் இன்றி சட்டவிரோதமாக தமிழ், சிங்கள் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விற்பனை செய்தற்காக வைக்கபட்டிருந்த 70 மதுபான போத்தல்களே இவ்வாறு மீட்கபட்டுள்ளதாக ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யபட்ட சந்தேகநபரும் மீட்கபட்ட மதுபான போத்தல்களும் பொகவந்தலாவ பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டுள்ளதோடு குறித்த சந்தேக நபருக்கு பொலிஸாரினால் பிணை வழங்கபட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 24 ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸாரால் உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைககளை ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸாரும் பொகவந்தலாவ பொலிஸாரும் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.