க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தொடர்ச்சியாக தடையின்றி மின்சாரத்தினை விநியோகிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று(திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

பரீட்சை அட்டவணைக்கு அமைவாக, பரீட்சைக்கு முன்னர் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்குமாறு கல்வித் திணைக்களத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சபையின் பொது முகாமையாளர் ரொஹான் சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று கூடி இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஆலோசனையும் பெறப்படும் என அவர் கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here