சீனாவின் விஞ்ஞான ஆய்வுக் கப்பல் ஒன்று இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளது.

எதிர்வரும் ஒகஸ்ட் 11ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் சைனாஸ் யுவான்வாங்-5 என்ற இந்த கப்பல் ஓகஸ்ட் 17ஆம் திகதி வரை துறைமுகத்தில் தரித்து நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சைனாஸ் யுவான்வாங்-5 விண்வெளி கண்காணிப்பு கப்பல் விண்வெளி தரை தகவல் பரிமாற்றத்தை செயல்படுத்தி வருகின்றது.

அத்துடன், செயற்கைக் கோள்களின் சுற்றுப்பாதை நிர்ணயம் மற்றும் அணுகலுக்கு முக்கியமான தகவல் ஆதரவை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து சுமார் 250 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் சீன கடனுதவியில் நிர்மாணிக்கப்பட்டது.

பின்னர் சீனாவிற்கான கடனை திருப்பிச் செலுத்த முடியாமை காரணமாக 99 வருட குத்தகைக்கு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here