இலங்கையை பாருங்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை கருத்திற்கொண்டு, இந்திய மாநிலங்கள், பொருட்களின் மீதான செலவினங்களைக் குறைக்க, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்திய மத்திய வங்கியான ரிசேர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
உரிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாவிட்டால், மாநில நிதியமைப்பு, பல்வேறு எதிர்பாராத அதிர்ச்சிகளுக்கு ஆளாகக்கூடும் என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
கடன் நிலையற்ற மாநிலங்கள்
பீஹார்
பஞ்சாப்
குறிப்பாக பீகார், கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் கடன் இருப்பு நிலையற்றதாக உள்ளது.
அதாவது கடன் வளர்ச்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் அவற்றின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை விட அதிகமாக உள்ளது என்று இந்திய ரிசேர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
தகுதியற்ற இலவசங்களுக்கான செலவினம் அதிகரிப்பு, தற்செயல் பொறுப்புகளை விரிவுபடுத்துதல் போன்ற செயல்களே இதற்கான காரணங்களாகும்.
இந்தநிலையில், மாநிலங்கள், தமது கடன் அளவை நிலைப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் இந்திய மத்திய வங்கி பரிந்துரைத்துள்ளது.