இலங்கையின் சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டமொன்றிலும் பின்னர் காலிமுகத்திடல் வன்முறையிலும், வட்டரெக்க திறந்தவெளி சிறைச்சாலை முகாமின் கைதிகள் குழுவொன்று கலந்துகொண்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் நேற்று வடரெக திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.

அத்துடன், கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் செயலாளர் சுதேஷ் நந்திமால் மற்றும் சட்டத்தரணி சேனக பெரேரா ஆகியோரிடம் மனித உரிமை ஆணைக்குழு, நேற்று வாக்குமூலத்தை பதிவுசெய்தது.

மகிந்தவின் கூட்டத்தில் வட்டரெக்க சிறைக்கைதிகள்! விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஆணையாளர்!மகிந்தவின் கூட்டத்தில் வட்டரெக்க சிறைக்கைதிகள்! விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஆணையாளர்!

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here