சுமார் நாற்பது இராஜாங்க அமைச்சர்கள் இன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலரும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர்களுக்கான துறைகள் அறிவித்தல் மற்றும் துறைகளை வர்த்தமானியில் அறிவித்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.