இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வாகனங்களுக்கான எரிபொருள்  விநியோகத்தில் சில வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன.

இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விநியோகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடு

இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு 2,500 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவுக்கும் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வான்கள், கார்கள் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு, 10,000 ரூபாவுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்படும்.

எனினும், பேருந்துகள், லொறிகள் உட்பட வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் உழவு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here