இலங்கையில் போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைக் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைக் கட்டணங்களை திருத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இரு வாரங்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை விலைசூத்திரம் பயன்படுத்தப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி: போக்குவரத்து கட்டண திருத்தத்திற்கு அனுமதி

இந்த நிலையில் க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல், கட்டணங்களைத் திருத்துவது குறித்து கலந்துரையாடுமாறும் அமைச்சர் போக்குவரத்துத் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (24) அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்திருந்தார்.

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி: போக்குவரத்து கட்டண திருத்தத்திற்கு அனுமதி

எரிபொருளின் விலைகளை அதிகரிப்பதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியதையடுத்தே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருளின் விலையை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் விலைக்கு நிகராக லங்கா IOC நிறுவனமும், பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை அதிகரித்துள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here