நாடாளுமன்ற நிலையியற்கட்டளையை ரத்துச்செய்து ஜனாதிபதியின் மீது திருப்தியின்மை தொடர்பான யோசனையை இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற முன்மொழிவு இலங்கையின் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

(எனினும் இந்த யோசனை மற்றும் ஒரு நாளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது)

இது தொடர்பான யோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் முன்மொழிந்தார்.

இதன்போது கருத்துரைத்த அவர், நாட்டில் இன்று அனைவரும் இதனை பற்றியே பேசுவதாக குறிப்பிட்டார்

எனவே இன்று இந்த யோசனைக்கான வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடையாக இருக்கக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.

 

யோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல வழிமொழிந்தார். இதன்போது ஜனாதிபதி கடந்த காலங்களில் 32 தடவைகளாக தமது பொறுப்புக்களில் இருந்து தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின்போது யோசனைக்கு ஆதரவாக 51 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here