வன்முறை காரணமாக வீடுகளை இழந்து இடம்பெயர்ந்து வாழும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலவத்துகொட வீடமைப்புத் திட்டத்தில் உள்ள வீடுகளை தற்காலிகமாக வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அண்மைய நாட்களில் 55 எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் வன்முறையாளர்களால் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளன.

மேலும், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மேலதிகமாக 06 மெய்ப்பாதுகாவலர்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபபக்சவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.வன்முறையால் வீடுகளை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்! அதிகாரிகளுக்கு கோட்டாபய  விடுத்துள்ள பணிப்புரைGallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here