நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை மீறுபவர்களை கைது செய்ய ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் வீதி தடைகளை ஏற்படுத்தி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமை ஹட்டன் மல்லிகைபூசந்தி,மணிகூட்டு கோபுரம் அருகாமையில் மற்றும் எம்.ஆர், டவுன், டிக்கோயா உள்ளிட்ட பல இடங்களில் பொலிஸாரும் இரானுவத்தினரும் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதன்போது உரிய அனுமதிபத்திரமின்றி பயணம் செய்த வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களின் வாகனங்களும் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டன. ஒரு சில சாரதிகள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு சட்டம் காரணமாக மலையக நகரங்கள் வெறிச்சோடி கிடந்ததுடன், அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்கள் மாத்திரம் வீதியில் பயணிப்பதனை காணக்கூடியதாக இருந்தன.

எனினும் தேயிலை தோட்டங்களில் தேயிலை கொழுந்து பறித்தல், உள்ளி பெருந்தோட்டம் சார்ந்த தொழில்கள் வழமை போலவே இடம்பெற்று வருகின்றன.

ஊரடங்கு சட்டத்தினை மீறிய பலர் கைது: சோதனை நடவடிக்கை தீவிரம் (Photos)

Gallery Gallery Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here