ஆளும் கட்சிக்குள் பாரிய பிளவு நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றின் மூலம் நாமல் ராஜபக்ச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் மேலும்,

ஒரு தொகுதி மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். எதிர்க்கட்சியினர் போராட்டங்கள், பேரணிகளை நடத்துவதில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர்.

ஆளும் கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதுடன், பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.

நாடு பாரதூரமான பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில் நாம் அனைவரும் பிரச்சினைக்கு தீர்வு காண மெய்யாகவே முனைப்பு காட்டுகின்றோமா?

அல்லது வேறு விடயங்களில் தீவிரமாக இருக்கின்றோமா என கேள்வியெழுப்பியுள்ளார்.

Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here