நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டும் எந்த தரப்பினருக்கும் அரசாங்கத்தை நடத்த வாய்ப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் தெரிவித்தார்.

மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

நெருக்கடி நிலை ஏற்பட்டால் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கலந்துரையாடலில் கலந்து கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். யாருக்கும் பயப்பட வேண்டாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த அமரவீர, சாந்த பண்டார மற்றும் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதுவும் கூறவில்லை. விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில உட்பட அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் 11 அரசியல் கட்சிகளின் 11 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் விவாதத்தில் பங்கேற்கவில்லை. எனினும், 138 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

மேலும், 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இருந்து விலகி இன்று (5ஆம் திகதி) சுயேட்சையாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாற தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான மைத்திரிபால சிறிசேன மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் இன்று விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here