நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பொன்றை விடுத்துள்ளார்.
நாட்டில் நேற்றைய தினம் முதல் இலங்கை அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதற்கு நடுவில் பதவி விலகள் மற்றும் நியமனங்கள் தொடர்பான பல தகவல்களும் வெளியாகி வருகின்றன.
பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர்ந்த, அமைச்சரவையிலுள்ள அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வரும் பின்னணியில் இவ்வாறு அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே ஜனாதிபதி குறித்த அழைப்பை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் அமைச்சுப் பொறுப்பை ஏற்று தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண நாடாளுன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.