இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களில் முழுமையாக இணைந்து செயற்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பதவியிலிருந்து விடைபெறும் தூதுவர் எலய்னா டெப்லிட்ஸ் இது குறித்து குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியமானது. அமெரிக்கர்களுக்கு மட்டுமன்றி அமெரிக்காவுடன் இணைந்து செயற்படும் அனைத்து ஜனநாயக பங்காளர்களும் மனித உரிமைகளை மதித்து செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த கால மற்றும் தற்போதைய மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த கால மற்றும் நிகழ்கால அநீதிகளுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக அரசாங்கமொன்று அந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் பொறுப்பு கூற வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் குறித்து மெய்யான விசாரணை நடாத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க முனைப்புக்கள், காலமாறு நீதிப் பொறிமுறைமை மற்றும் நீடித்து நிலைக்கும் சமாதானத்தை நிலைநாட்டுவதில் அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார ரீதியில் வெற்றியளிக்க்க்கூடிய கொள்கைகளை வகுப்பது குறித்து அரசாங்கம் சிரத்தை காட்ட வேண்டுமென ஊக்கப்படுத்துவதாக அவா தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here