நாட்டில் பாடசாலை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை காணப்படுமாக இருந்தால் அதற்கான அனுமதியை வழங்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

என்ற போதும் அவ்வாறான சூழ்நிலை தற்போது கிடையாது என சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டியது, கல்வி அதிகாரிகளின் பொறுப்பு. அந்த சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.

அவ்வாறான சூழ்நிலையை உருவாக்கி அதனை கல்வி அதிகாரிகள் எம்மிடம் உறுதிப்படுத்தினால் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியை வழங்க முடியும்.

சுகாதார அமைச்சினால் அந்த சூழ்நிலையை ஏற்படுத்த முடியாது. நோயாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதே சுகாதார அமைச்சின் பொறுப்பு.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் கோவிட் பரவலை தடுப்பதற்கும், மாணவர்களின் ஊடாக வீட்டிலுள்ளவர்களுக்கு கோவிட் பரவுவதை தடுப்பதற்குமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here