இலங்கையில் சிறுவர்களை வைத்திருக்கும் பெற்றோருக்கு விசேட வைத்தியர் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
சிறுபிள்ளைகளுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டும் என ரிட்ஜ்வே வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சன்ன டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் தொற்றியிருந்தாலும் இல்லை என்றாலும் சிறு பிள்ளைகளுக்கு காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியர்களின் ஆலோசனை பெறுவது கட்டாயம் என பெற்றோர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொவிட் தொற்றுடன் வைத்தியசாலைகளில் தினசரி அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பினை கருத்திற் கொண்டு வைத்தியர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.