இலங்கை தற்போது நான்காம் எச்சரிக்கை நிலையை அடைந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினரும், ஊடகக்குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாதமொன்றுக்கு 10,000 பேர் உயிரிழக்கும் அவலநிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது காணப்படும் கோவிட் அச்சுறுத்தல் நிலைமையானது தொடர்ந்து நீடித்தால் எதிர்வரும் நாட்களில் நாள் ஒன்றுக்கு 10000 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்படும் அபாயம் உள்ளது. அத்துடன் மாதமொன்றுக்கு 10000 பேர் உயிரிழக்கும் அவலநிலையும் ஏற்படும்.

நாட்டில் தற்போது பதிவாகும் கோவிட் மரண வீதமானது இந்தியாவை விட ஐந்து வீதத்தால் அதிகரித்துள்ளது.

பெயரளவில் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கில் 90 சதவீதமான மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தால் மாத்திரமே கோவிட் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.

நாடு தற்போது எச்சரிக்கை நிலை நான்கில் உள்ளது. இது சிவப்பு எச்சரிக்கையையும் சமூக பரவலையும் குறிக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தென்னாபிரிக்காவில் பரவும் சி12 எனப்படும் புதிய கோவிட் திரிபும் இலங்கையில் பரவும் அபாயம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here