அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை அரசாங்கத்தினால்  நிர்ணயிக்கப்பட்டு அது குறித்த வர்த்தமானி அறிவிப்பு நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோ பொதி செய்யப்பட்ட சீனி 125 ரூபாய்க்கும் பொதி செய்யப்படாத ஒரு கிலோ சீனி 122 ரூபாய்க்கும் விற்பனை செய்ய வேண்டும்.

அதேபோல், ஒரு கிலோ பொதி செய்யப்பட்ட சிவப்பு சீனியின் விலை 128 ரூபாயாகவும் பொதி செய்யப்படாத சிவப்பு சீனியின் விலை 125 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கீரி சம்பா கிலோ ஒன்றின் விலை 125 ரூபாயாகவும்  வெள்ளை அல்லது சிவப்பு சம்பா அரிசி கிலோ ஒன்றின் விற்பனை விலை 103 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சிவப்பு நாடு கிலோ ஒன்றின் அதிகூடிய சில்லறை விலை 98 ரூபாயாகவும் பச்சை அரிசி கிலோ ஒன்றின் அதிகூடிய விலை 95 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here