நாட்டில் கொவிட் பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் நாட்டை முழுமையாக முடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார தரப்பினரின் ஆலோசனைகள், பரிந்துரைகளுக்கு அமைய நாட்டை ஒரு வாரமாவது முடக்குமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்ற உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது,நாட்டை முடக்குவது தொடர்பில் ஜனாதிபதியால் அறிவிக்கப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அத்துடன், தற்போது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here