நாடளாவிய ரீதியில் இயங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் சுகாதார பிரிவிற்கு அறிவிக்காமல் மறைத்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு தொற்றாளர்களை மறைத்து வைத்திருக்கும் எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் அவற்றுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார பரிசோதகர் இது தொடர்பில் அவதானமான இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட போதிலும் எழுமாறான பி.சி.ஆர் பரிசோதனைகள் ஊடாக அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதை கவனத்திற் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here