விசைப் பலகையின் வலது புறம் Insert எனும் ஒரு விசை இருப்பதை நீங்கள் அறிவீர்கள். சில கீபோர்டுகளில் இது INS எனப் பெயரிடப் பட்டிருக்கும். இதன் பயன்பாடு என்ன என்பதை பலரும் அறிந்திருப்பதில்லை?

டைப் செய்த எழுத்துக்களை அழிப்பதற்கு Delete Key பயன்படுத்துவதைப் போல் சில வேர்ட் ப்ரொஸசர்களில் (Word Processor) எழுத்துக்களை இடையில் செருகு வதற்கு இந்த Insert கீயை அழுத்த வேண்டியிருக்கும். அல்லாவிடின் இடையில் டைப் செய்யும் எழுத்துக்கள் முன்னர் டைப் செய்த எழுத்துக்களை (OVERTYPE / Overwrite) அழித்து விடும்.

எம். எஸ். வர்டில் இந்த விசை எம்.எஸ்.வர்டைத் திறந்ததுமே Insert நிலையிலேயே இயல்பாக் (default) இருக்கும். Insert கீயை ஒரு முறை அழுத்தியதும் அது Overwrite நிலைக்கு மாறி விடும்.

அப்போது இடையில் எழுத்துக்களை டைப் செய்யும்போது முன்னர் டைப் செய்த எழுத்துக்களை அழித்து விடுவதைக் காணலாம்.

ஒரு வேளை Insert விசையை அழுத்தியும்கூட Overwrite நிலைக்கு மாறாமலிருந்தால், File – Options – Advanced ஊடாக Editing options பகுதிக்குச் சென்று Use the Insert key to control overtype mode என்பதை தெரிவு நிலைக்கு மாற்ற வேண்டும்.

எம்.எஸ்.வர்ட் தற்போது Insert நிலையிலா அல்லது Overtype இலா இருக்கிறது என்பதை Status Bar இல் காண்பிக்கும்.

ஸ்டேட்டஸ் (Status Bar) பாரில் Overtype என இருப்பின் அது Overtype நிலையில் இருப்பதாகக் கொள்ளுங்கள்.

மேலும் Insert கீயை அழுத்தியதும் ஸ்டேட்டஸ் பாரில் Insert / Overtype எனக் காண்பிக்காமலிருந்தால் ஸ்டேட்டஸ் பாரின்மீது ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Overtype என்பதைத் தெரிவு செய்ய வேண்டும்.

Insert கீயை எம்.எஸ்.வர்டில் காப்பி செய்தை பேஸ்ட் (Paste) செய்வதற்கான ஒரு குறுக்கு வழி விசையாகவும் பயன்படுத்தலாம் என்பது மற்றுமொரு பயன்பாடு.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here