ரஷ்யாவில் போன் ,மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்டை கண்டுபிடித்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டில் நேர்முகத் தேர்வு செய்வதற்கு ரோபோட் ஒன்றைக் கண்டுபிடித்த ரஷ்ய விஞ்ஞானிகள் அதற்கு “வேரா ” எனவும் பெயரிட்டனர்.

ப்ரோக்ராம் செய்யப்பட்டபடி நேர்முகத் தேர்வுகளை சரியாக நடத்தி வந்த “வேரா” நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து அதுவாகவே தொலைபேசி மூலம் அழைக்கிறது.

தினமும் 1500 பேர் வரை இன்டர்வியூ செய்யும் “வேரா” யார் வேண்டுமானாலும் உபயோகித்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

“வேரா” நேர்முகத் தேர்வில் கேள்விகள் கேட்டு பதில் சரியா தவறா என்பதை வைத்து நபர்களை ஆட்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கிறது. ரோபோட் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்கள் மிகத் திறமையானவர்களாக இருப்பார்கள் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆண் பெண் இரு குரல்களிலும் பேசும் “வேரா” கணினி குரல் இன்றி மனிதக் குரலில்தான் பேசுகிறது.

என்ன வேலைக்கு ஆட்கள் தேவை என்று கூறிவிட்டால் போதும், அதுவே கணினியைப் பயன்படுத்தி இணையம் மூலம் எந்த மாதிரி கேள்விகள் இந்த வேலைக்கு உதவும் எனத் தீர்மானித்து அந்தக் கேள்விகளை கேட்கிறது எனவும் வேலைக்கு யாரும் விண்ணப்பிக்காத பட்சத்தில் தானே இணையத்தில் வேலை வேண்டி விண்ணப்பித்திருப்பவர்களைத் தேடி போன் செய்து வேலைக்கு அழைக்கிறது.

ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு முறையில் ரஷ்யாவில் பயன்பாட்டில் இருக்கும் இந்த ரோபோட்டை 200 நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. அனுதினமும் 5300 இன்டெர்வியூக்கள் எடுக்கும் இந்த ரோபோட்கள் 95 சதவிகிதம் மிக சரியான தகுதியான ஆட்களை தேர்வு செய்திருப்பதாக கூறுவது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here