உலகளவில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மெசேஜிங் அப்பிளிக்கேஷன் ஆக வாட்ஸ் ஆப் காணப்படுகின்றது.

இது ஒரு சமூக மயப்படுத்தப்பட்ட அப்பிளிக்கேஷன் என்பதால் சில நாடுகளில் இதனைப் பயன்படுத்துவதற்கு வயதெல்லை காணப்படுகின்றது.

இதற்கிணங்க ஐரோப்பிய நாடுகளில் 13 வயதிற்கு மேற்பட்டவர்களே வாட்ஸ் ஆப்பினை பயன்படுத்தக்கூடியதாக இருந்தது.

எனினும் நேற்றைய தினத்திலிருந்து புதிய வயதெல்லை அறிவிக்கப்பட்டுள்ளது.

GDPR (European General Data Protection) அமைப்பினால் வரையறை செய்யப்பட்டுள்ள இந்த வயதெல்லை 16 ஆகக் காணப்படுகின்றது.

எவ்வாறெனினும் அடுத்த மாதத்திலில் இருந்தே புதிய நடைமுறைய பயன்பாட்டிற்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here