சமூக வலைதளமான பேஸ்புக் தற்போது சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில், முன்பு இல்லாத அளவிற்கு அதன் வருமானம் உயர்ந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் மிகப்பிரலமான பேஸ்புக், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. இதன் காரணமாக கிடைக்கும் விளம்பரங்கள் மூலமாக, பில்லியன் டொலர் கணக்கில் வருவாயை ஈட்டி வருகிறது.

ஆனால், சமீபத்தில் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட விடயம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க்கும் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, பேஸ்புக் நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மையில் கேள்வி எழுந்தது. இந்நிலையில், பேஸ்புக்கின் வருவாய் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.

தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் காலாண்டு வருமானம் 49 சதவிதம் அதிகரித்து, 12 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் பெற்றுள்ள நிகர லாபம் 65 சதவிதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

இது முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ள வருமானம் ஆகும். இதுகுறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பல்வேறு முக்கிய சவால்களை கடந்து, நமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது’ என தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here