தற்போது ஒவ்வொருவரும் சந்திக்கும் ஓர் பெரும் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. நம்மிடம் எப்பேற்பட்ட பிரச்சனையையும் சமாளிக்க தைரியம் இருக்கும்.

ஆனால் தலைமுடி அதிகம் உதிர ஆரம்பித்தால், அதை நினைத்து அதிகம் கவலை கொண்டு, சில சமயங்களில் அது ஒருவரது மன அழுத்தத்தையே அதிகரித்துவிடும்.

அந்த அளவு தலைமுடி நமக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஏனெனில் இது தான் ஒருவரது அழகையே சிறப்பாக காட்டுகிறது.

இன்று தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க ஏராளமான தலைமுடி பராமரிப்பு பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டு வருகின்றன.

ஏனெனில் மக்கள் அந்த அளவு தங்களது தலைமுடி உதிர்வது நிற்பதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிப்பதற்கு தயாராக உள்ளனர்.

ஆனால் என்ன, இப்படிப்பட்ட பொருட்களால் எவ்வித பலனும் தான் கிடைப்பதில்லை. ஆனால் தலைமுடி உதிர்வதை நிறுத்துவதற்கு ஏராளமான இயற்கை வழிகளும், எண்ணெய்களும், ஷாம்புக்களும் உள்ளன.

தலைமுடி உடைவதைத் தடுக்கும்

பூண்டு தலைமுடியின் வலிமையை மேம்படுத்தி, தலைமுடி உதிர்வதைத் குறைக்க உதவும். இதன் விளைவாக தலைமுடி எலிவால் போன்று அசிங்கமாக காணப்படுவது தடுக்கப்படும். மேலும் பூண்டு ஷாம்புவைப் பயன்படுத்தினால், தலைமுடியின் முனைகளில் ஏற்பட்ட வெடிப்புக்களும் குறையும்.

ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்

பூண்டு ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தைத் தூண்டிவிடும். இதனால் மயிர்கால்களில் இருந்து டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, மயிர்கால்கள் ஆரோக்கியத்துடனும், ஊட்டச்சத்துடனும் இருக்கும்.

ஒருவரது மயிர்கால்கள் ஆரோக்கியமாக இருந்தால், அது ஆரோக்கியமான மற்றும் வலிமையான தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவும். ஒருவேளை தலைமுடியில் பாதிப்பு ஏற்படுவதாக இருந்தாலும், அதை நாசூக்காக சமாளித்து தடுக்கும்.

அந்த பூண்டு ஷாம்புவை எப்படி வீட்டிலேயே தயாரிப்பது என்று காண்போம்.

பூண்டு ஷாம்பு தயாரிக்கத் தேவையான பொருட்கள்
  • நற்பதமான பூண்டு பற்கள் – 10-15
  • ஆலிவ் ஆயில் – 1 டீஸ்பூன்
  • புதினா எண்ணெய் – 3-5 துளிகள்
  • டீ-ட்ரீ ஆயில் – 3-5 துளிகள்
  • பேபி ஷாம்பு/ஆர்கானிக் ஷாம்பு – 1 பாட்டில்
செய்முறை
  • பூண்டு பற்களின் தோலை நீக்கிவிட்டு, நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
  • பின் அதை நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
  • பின்பு அந்த பேஸ்ட்டில் சிறிது நீர் சேர்த்து சற்று க்ரீம் போல் கலந்து கொள்ள வேண்டும்.
  • பிறகு அந்த பூண்டு பேஸ்ட்டுடன், 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 3-5 துளிகள் புதினா ஆயில் மற்றும் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  • தயாரித்து வைத்துள்ள கலவையை பேபி ஷாம்பு அல்லது ஆர்கானிக் ஷாம்புவுடன் சேர்த்து நன்கு கலந்து, ஒரு காற்று புகாத பாட்டிலில் போட்டு அடைத்துக் கொள்ள வேண்டும்.
  • இறுதியில் இந்த பூண்டு ஷாம்பு பாட்டிலை உங்களது அன்றாட ஷாம்பு பாட்டில் வைக்கும் இடத்தில் மாற்றி வைத்துப் பயன்படுத்துங்கள்.
  • இந்த ஷாம்புவை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தவும், தலைமுடி உதிர்வது நிற்பதைக் காணலாம்.
எப்படி வேலை செய்கிறது?

பூண்டு தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பிற்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்குகிறது. இந்த பூண்டு உள்ள ஷாம்புவைப் பயன்படுத்துவதால், தலைமுடி உதிர்வது நிற்பதோடு, தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டி விட்டு, ஒட்டுமொத்த தலைமுடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
மேலும் இந்த பூண்டு ஷாம்புவில் சேர்க்கப்பட்டுள்ள ஆலிவ் ஆயில் மற்றும் நறுமண எண்ணெய்கள், தலைமுடிக்கு பளபளப்பைக் கொடுப்பதோடு, வறட்சியின்றி ஈரப்பசையுடன் வைத்துக் கொள்வதுடன், பூண்டின் நாற்றத்தை மறைக்கவும் செய்யும்.

பூண்டு ஷாம்புவின் நன்மைகள்
அடர்த்தியான தலைமுடி

பூண்டில் உள்ள ஆன்டி-பயாடிக் பண்புகள், தலைமுடி உதிர்விற்கு காரணமான பாக்டீரியாக்களை அழிக்க உதவும்.

இந்த பண்புகள், ஸ்கால்ப்பில் உள்ள அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க உதவி, தலைமுடியின் அடர்த்தியையும் அதிகரிக்க உதவும். முக்கியமாக பூண்டு ஷாம்பு, மயிர்கால்களின் வளர்ச்சி மற்றும் அடர்த்தியைத் தூண்டிவிடும்.

ஸ்கால்ப் மற்றும் தலைமுடி ஆரோக்கியம் தக்க வைக்கப்படும்

இதுவரை ஏராளமான கெமிக்கல்களைப் பயன்படுத்தியும், வெயிலில் சுற்றியும் பாதிக்கப்பட்ட தலைமுடியின் ஆரோக்கியத்தை பூண்டு தக்க வைக்க உதவும்.

மேலும் இது தலைமுடியின் வறட்சியை சரிசெய்ய உதவும் மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பையும் போக்கும். ஒருவரது ஸ்கால்ப் ஆரோக்கியமாக இருந்தால் தான், முடியின் வேர் வலிமையாக இருந்து, தலைமுடி உதிர்வது தடுக்கப்படும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here