சர்வதேச அளவில் வாட்ஸ்அப் பயன்பாட்டில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. வாட்ஸ்அப் பயன்பாடு தற்போது இன்றியமையாததாகிவிட்டது. இந்நிலையில், காம்ஸ்கேர் என்ற நிறுவனம் வாட்ஸ் அப் பயன்பாடு குறித்த ஆய்வு ஒன்றை உலகளவில் நடத்தியது.

 

இதில் இந்தியாவில் தான் அதிகமானோர் கைப்பேசி வாட்ஸ்அப் மூலமாக, தகவல்களை பரிமாறிக் கொள்வதில் அதிக அளவில் நேரத்தை செலவழிப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்தியர்கள் சுமார் 89 சதவிதம் கைப்பேசி வாட்ஸ் அப்பையும், 11 சதவிதம் கணினியிலும் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தியிருக்கின்றனர். இதன் காரணமாக சர்வதேச அளவில் இந்தியா வாட்ஸ் அப் பயன்பாட்டில் முதலிடத்தில் உள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டில், இந்தியர்கள் 98 சதவிதம் கைப்பேசி வாட்ஸ் அப் செயலி மூலமாகவும், 2 சதவிதம் பேஸ்புக் மெசஞ்சர் மூலமாகவும் தகவல் பரிமாற்றம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் 87 சதவிதம் இந்தோனேஷியாவிலும், 80 சதவிதம் மெக்சிகோவிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் அர்ஜெண்டினா, மலேசியா மற்றும் ஸ்பெயின் நாடுகளிலும் வாட்ஸ் அப் பயன்பாடு அதிக அளவில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here