மனித வேலைகளை இலகுவாக்குவதற்கு பல்வேறு வகையான ரோபோக்கள் உருவாக்கப்பட்டிருப்பது அறிந்ததே. எனினும் முதன் முறையாக கதிரை போன்ற தளபாடங்களை தானாகவே குறுகிய நேரத்தில் அசெம்பிள் செய்யக்கூடிய ரோபோ ஒன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

IKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர் தளபாடங்களின் பாகங்களை துல்லியமான முறையில் அறிந்துகொள்வதற்கு இந்த ரோபோவில் முப்பரிமாண (3D) கமெராக்களும், தேவையன திசைகளில் விசையை வழங்குவதற்கான சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் குறித்த ரோபோ தொழிற்படும் விதத்தினை எடுத்துக்காட்டும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here