ஆப்பிள், கூகுள், அமேஷான் போன்ற சில முன்னணி நிறுவனங்கள் தமது சாதனங்களுக்கும், சேவர்களுக்கும் தேவையான சிப்களை தாமே வடிவமைக்கின்றன.

 

இதேபோன்று பேஸ்புக் நிறுவனமும் தனது சேவர்கள் மற்றும் சாதனங்களுக்கான சிப்களை தானே வடிவமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏனைய நிறுவனங்களின் சிப்களை பயன்படுத்துவது பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கக்கூடிய சாத்தியம் இருப்பதனாலேயே இந்த முடிவுக்கு பேஸ்புக் வந்துள்ளது.

எதிர்காலத்தில் Qualcomm போன்ற ஏனைய நிறுவனங்களின் சிப்களை மிகக் குறைந்த அளவிலேயே பேஸ்புக் நிறுவனம் பயன்படுத்தவுள்ளது.

ஸ்மார்ட் ஸ்பீக்கர் மற்றும் Oculus மாயத்தோற்றம் கொண்ட ஹெட்செட் போன்ற சாதனங்களை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இச் சாதனங்களிலும் தனது சிப்களையே பயன்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here