சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜினான் எனும் நகரத்தில் ஸ்மார்ட் வீதி உருவாக்கப்படவுள்ளது.
இவ் வீதியானது இலத்திரனியல் வாகனங்களை சார்ஜ் செய்துகொள்ளும் வசதியினைக் கொண்டிருக்கும். இதற்காக சோலார் பேனல்கள், மேப்பிங் சென்சார், இலத்திரனியல் மின்கல சார்ஜர்கள் என்பவற்றினையும் உள்ளடக்கியிருக்கும்.இன்டெலிஜென்ட் ஹைவே என அழைக்கப்படும் இந்த வீதியானது சுமார் 1,080 மீற்றர்கள் நீளமானது.
இவ் வீதியில் நாள் ஒன்றிற்கு 45,000 வாகனங்கள் பயணிக்கக்கூடியதாகவும் இருக்கும்.மேலும் இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரமானது வாகனங்கள் தவிர வீதியில் உள்ள மின்விளக்குகள் ஒளிரவும், 800 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கவும் போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 2030ம் ஆண்டளவில் நாட்டிலுள்ள 10 சதவீதமான வாகனங்கள் முற்றுமுழுதாக மின்சாரத்தில் இயங்கக்கூடியதாக இருக்கும் என சீன அரசு தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.