இன்றைய காலகட்டத்தில் தொப்பை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஏராளம், அதை குறைக்க பலரும் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
தொப்பையை குறைக்கும் முன் எதனால் தொப்பை வந்தது, என்ன காரணமாக இருக்கும் என ஒவ்வொருவருமே சுய பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
குறிப்பாக உடலுக்கு தேவையான தண்ணீரை விட அதிகமாக குடிக்கும் பட்சத்திலும் தொப்பை உருவாக காரணமாக அமைகிறது.
ஒரே நேரத்தில் அதிகளவு தண்ணீரை அருந்தும் போது வயிற்றுப் பகுதி விரிவடைவதுடன், உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது.
அதுமட்டுமின்றி வயிறு உப்பிய நிலையில் இருக்கும், இது அதிகளவு தண்ணீர் குடிப்பதாலும், அதிகளவு உணவு எடுத்துக் கொள்வதாலும் ஏற்படுகிறது.
குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாயின் போது இந்த பிரச்சனை ஏற்படும், அந்நேரத்தில் ப்ரோஜெஸ்டிரோன் ஹார்மோனின் அளவு அதிகரிப்பதால் இவ்வாறு ஏற்படுகிறது, மாதவிடாய் முடிந்த பின்னர் வயிறு உப்புசம், பசியின்மை ஏற்பட்டு விடும்.
இதுதவிர நாம் சாப்பிடும் போது அதிகளவு காற்றை உட்கொள்வதும் செரிமானத்தில் பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.
எனவே கண்டிப்பான முறையில் உணவுப் பழக்கவழக்கத்தை மாற்றிக் கொள்வது அவசியம்.
இதற்காக தண்ணீர் குடிக்கும் அளவையும் குறைத்துக் கொள்வது தீர்வாகாது, நம் உடல் சீராக இயங்க ஒருநாளைக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம்.
வெறும் தண்ணீர் மட்டுமின்றி தண்ணீர் சத்து அதிகமுள்ள பழங்களை உட்கொள்ளலாம்.
இதைதவிர ஒருநாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்வதும் அவசியம்.