இலங்கையில் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்போருக்கு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் அமுலிலுள்ள பணத்திற்கு பதிலாக ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தும் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, தனியார் பேருந்து மற்றும் ரயிலில் பயணிக்க கூடிய பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டை ஒன்றை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

டச் கார்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் அட்டையை கொள்வனவு செய்யும் பயணிகள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளிலும், தனியார் பேருந்துகளிலும், ரயிலிலும் பயணிக்க முடியும்.

இந்த அட்டை பயணிகள் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். பேருந்து அல்லது ரயிலில் பயணிக்கும் போது அட்டையில் அதற்கான கட்டணம் குறைத்து கொள்ளப்படும்.

இந்த ட்ச் அட்டை பயன்படுத்துவதனால் மீதி பணம் கிடைக்காமை போன்ற சிரமங்களை தவிர்க்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here