2022ஆம் ஆண்டளவில் சாரதிகள் இல்லாத பயணிகள் போக்குவரத்து பஸ் வண்டிகளை சிங்கப்பூர் அரசாங்கம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

குறுகிய தூரங்களை நோக்கி பயணிப்போரின் நலன் கருதி இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிங்கபூர் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

அதிகளவில் சனநெரிசல் இல்லாத வீதிகளில் இந்த பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தி பஸ் வண்டிகளின் கதவுகளை திறப்பதற்கான வசதிகளும் இதில் ஏற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here