சமீபத்திய கட்டுரைகள்

எரிபொருள் விலை உயர்வு தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள தகவல்…

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை உயர்வு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் எரிபொருள் விலையேற்றம், தேசிய பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது, வங்கி வட்டி வீதங்களை குறைந்த மட்டத்தில் வைத்திருப்பது, வெளிநாட்டு ஒதுக்கங்களின் நிலைத்தன்மையை பேணுவது மற்றும் பொதுமக்களின்...

திடீரென மைதானத்தில் மயங்கி வீழ்ந்த வீரர்! யூரோ கிண்ண கால்பந்தாட்ட போட்டி நிறுத்தம்…

  ஐரோப்பா கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் இடம்பெற்று வரும் நிலையில், டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மைதானத்தில் மயங்கி வீழ்ந்த நிலையில் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. டென்மார்க் மற்றும் பின்லாந்து ஆகிய அணிகள் இன்று மோதின. கோபன்ஹேகனில் நடந்த இந்த போட்டியின் போது கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென...

ஜி 7 உச்சிமாநாடு ஆரம்பமானது! – அரச குடும்பத்தினர் உலக தலைவர்களுக்கு வரவேற்பு….

  ஜி-7 கூட்டமைப்பின் உச்சிமாநாடு பிரித்தானியாவில் ஆரம்பமாகியுள்ளது. இதில் கோவிட் பெரும் தொற்றுக்கு பின்னர் உலக தலைவர்கள் பலர் முதல் முறையாக நேரில் சந்தித்துக்கொண்டனர். தொழில் வளா்ச்சியில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கா, பிரித்தானியா, இத்தாலி, கனடா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய 7 நாடுகளை உள்ளடக்கியது ஜி-7 கூட்டமைப்பு. இந்த...

பிரித்தானியாவைத் தாக்கும் குரங்கு அம்மை…..

  பிரித்தானியாவில் குரங்கு அம்மை (Monkey Pox) என்னும் வைரஸ் பரவுவதால் அங்குள்ள மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வட வேல்ஸில் இரண்டு நோயாளர்களுக்கு ஆட்கொல்லி குரங்கு அம்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பிரித்தானிய சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புச் செயலாளர் மட் ஹென்கொக் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கோவிட் தனிமைப்படுத்தல் இருந்து வரும் நிலையில் தற்பொழுது அரிய...

சட்டவிரோதமாக தங்கியிருந்த 61 இலங்கையர்கள் கைது….

  சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 61 இலங்கையர்களைக் கர்நாடகா மற்றும் தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்த இலங்கையர்கள் தங்குவதற்கு உதவியதற்காக மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டனர். கர்நாடகாவின் மங்களூருவில் இருந்து 38 இலங்கையர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 23 பேர் தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து...

இலங்கை செல்ல முயன்ற இங்கிலாந்தை சேர்ந்தவர் கைது…

  தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்து நகர் முத்தரையர் கடற்கரை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டைச் சேர்ந்தவர் எனச் சந்தேகப்படும் நபர் ஒருவர் சுற்றி வருவதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து கியூ பிரிவு பொலிஸார் சம்பவ இடத்துக்கு...

கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயம்…..

  திருகோணமலை - திரியாய் பகுதியில் வயலில் காவலுக்குச் சென்ற ஒருவரை கரடி தாக்கியதில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, திரியாய் பகுதியில் உள்ள வயலில் காவலுக்குச் சென்று உறங்கிக் கொண்டிருந்த போது கரடி பாய்ந்து அடித்ததாகவும் இதனையடுத்து காலில் காயம்...

மரம் முறிந்து விழுந்ததில் இளைஞர்கள் மூவர் படுகாயம்…

ஹட்டன் - நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் மரமொன்றின் பாரிய கிளையொன்று பேருந்து தரிப்பிடத்தில் முறிந்து விழுந்ததில் பேருந்துக்காக காத்திருந்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த மூவரும் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து...

வவுனியாவை சேர்ந்த மூவர் நட்டாங்கண்டல் பகுதியில் கைது…

  பயணக்கட்டுப்பாடு விதிமுறையை மீறிய குற்றச்சாட்டில் வவுனியாவை சேர்ந்த மூவர் நட்டாங்கண்டல் பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நட்டாங்கண்டல் பகுதியில் வான் ஒன்றில் பயணம் செய்த வவுனியா புளிதறித்த புளியங்குளத்தை சேர்ந்த இருவரும் செக்கட்டி பிலவு பம்பைமடு பகுதியை சேர்ந்த...

கோறளைப்பற்று மத்தியில் அறுபது வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி…

  கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் அறுபது வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.நஜீப்காப் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. இந்தவகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பிறைந்துறைச்சேனையில் உள்ள இரண்டு...