விஜய்
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை 7 ஸ்க்ரீன் லலித் குமார் தயாரித்து வருகிறார்.
இவர் ஏற்கனவே மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளராகவும், வாரிசு படத்தின் தமிழக விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார்.
இவர் தானா
இந்நிலையில், நடிகர் விஜய்யின் சொத்துக்களை தயாரிப்பாளர் லலித் குமார் தான் கவனித்து வருவதாகவும், விஜய்க்கு புதிய சொத்துக்களை கூட லலித் குமார் தான் வாங்கி தருகிறார் என்றும் பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
லலித் குமார் தமிழ் சினிமாவில் மகான், கோப்ரா, சமீபத்தில் வெளிவந்த வாத்தி என பல திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.