விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி தற்போது பான் இந்திய ஸ்டாராக மாறிவிட்டார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஃபர்ஸி வெப் சீரிஸ் கூட நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய் சேதுபதி அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் நடிப்பதாக கமிட்டாகி இருந்தார்.
ஆனால், திடீரென என்ன நடந்ததோ தெரியவில்லை, படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியேறிவிட்டதாக தகவல் வெளிவந்தது. அந்த தகவல் உண்மை தான் என்று தற்போது தெரிவிக்கின்றனர்.
வெளியேறிய விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி கேட்ட சம்பளம் கிடைக்கவில்லை என்பதினால் தான் அவர் இப்படத்திலிருந்து வெளியேறிவிட்டாராம். தனக்கு ரூ. 12 கோடி சம்பளம் வேண்டும் என்று விஜய் சேதுபதி கேட்டுள்ளாராம்.
ஆனால், விஜய் சேதுபதிக்கு அவ்வளவு பெரிய மார்க்கெட் இல்லை என்று கூறி ரூ. 5 கோடி தான் சம்பளமாக தருவேன் என்று தயாரிப்பு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
இறுதியில் ரூ. 10 கோடி வரை கூட தரவந்துள்ளனர். ஆனாலும், இந்த கூட்டணி கைகூடவில்லை.