கியாரா அத்வானி திருமணம்
பாலிவுட் நடிகை கியாரா அத்வானி மற்றும் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோரின் திருமணம் சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. மொத்த பாலிவுட் ரசிகர்களும் வியந்து பார்த்த அந்த திருமணம் ராஜஸ்தானில் இருக்கும் Suryagarh Palaceல் நடைபெற்றது.
அதில் சினிமா துறை நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டார்கள். திருமண போட்டோக்களும் இணையத்தில் படுவைரல் ஆகி இருந்தது.
தாலி விலை
கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் இருவரும் திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக பொது இடத்திற்கு வந்த போட்டோ மற்றும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
அகில் எல்லோரது கவனத்தை ஈர்த்தது கியாரா அணிந்து இருந்த சேலை தான். Sabyasachi Mukherjeeன் கலெக்ஷனில் இருந்து வந்த அந்த தாலியின் விலை 2 கோடி ருபாய் என தகவல் வெளியாகி இருக்கிறது.
இது எல்லோரையும் ஆச்சர்யம் ஆக்கி இருக்கிறது.