விஜய் ஆண்டனி

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக களமிறங்கி இப்போது சிறந்த நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி.

இதுவரை நிறைய படங்கள் நடித்துள்ளார், ஆனால் அவருக்கு பெரிய பெரிய ஹிட் கொடுத்த படம் என்றால் அது பிச்சைக்காரன் படம் தான்.

அம்மாவிற்காக எல்லாவற்றையும் இழந்து ஒரு விஷயம் செய்வார், படம் பெரிய அளவில் ரீச் ஆனது.

உடனே மக்கள் இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது எப்போது என கேட்க பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியது. மலேசியாவில் சமீபத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

 

நடிகரின் பதிவு

அங்கு விஜய் ஆண்டனிக்கு பயங்கர விபத்து ஏற்பட்டது. அதில் அவருக்கு தாடை மற்றும் மூக்கில் பயங்கர காயம் ஏற்பட்டது, இதனால் அவர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டார்.

பிரபல மருத்துவமனையில் அவருக்கு தாடை மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு தான் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் உங்களை சந்திக்கிறேன் என விஜய் ஆண்டனி மருத்துவமனையில் இருந்து புகைப்படத்துடன் டுவிட் செய்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here