தென்னிந்திய பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ. இவர் 2015 -ம் ஆண்டு வெளியான ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதன் பின் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் பல வெற்றி படங்களை கொடுத்தார். இவர் பிரபல நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அருமையாக நடித்திருந்ததனால் இவருக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது.

தற்போது இவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்துதெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் மாமன்னன், சைரன், ராகு தாத்தாபோன்ற வெளியாகவுள்ளது.

கீர்த்தி சுரேஷின் காதலர்

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் 13 வருடமாக தன்னுடன் பள்ளியில் படித்த நபரை காதலித்து வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கீர்த்தியின் காதலர் ரிசார்ட் ஓனர் என்றும் இவர்களின் காதலுக்கு இரு தரப்பு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் கூறியுள்ளார். இவர்களுக்கு நான்கு வருடம் கழித்து திருமணம் நடக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here