ரோஜா
சன் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிய சீரியல் ரோஜா. இதில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதில் இடத்தை பிடித்தவர் நடிகை பிரியங்கா.
இந்த சீரியல் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கும் மேல் ஓடியது. TRPல் நம்பர் 1 இடத்தை தக்கவைத்திருந்த இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முடிவுக்கு வந்தது.
பிரியங்காவின் புதிய சீரியல்
இந்நிலையில், இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை பிரியங்கா தற்போது புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகியுள்ளார்.
சீதாராமன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பு ஆகவுள்ளது. சீதாராமன் சீரியலின் போட்டோஷூட் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் இந்த சீரியல் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பு ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..