வாரிசு – துணிவு வசூல்
வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு திரைப்படங்களும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. தமிழகத்தில் வாரிசு படத்தை விட துணிவு படம் நல்ல வசூலை செய்து வருகிறது.
தமிழகத்தில் ஓரிரு கோடிகள் வித்தியாசம் இருந்தாலும், வெளிநாட்டில் வாரிசு படம் துணிவு படத்தை விட அதிக கோடிகள் வித்தியாசத்தில் வசூல் செய்து வருகிறது.
வசூல் விவரம்
அதன்படி, வெளிநாட்டில் வாரிசு படம் ரூ. 75 கோடி வரை வசூல் செய்துள்ளது. ஆனாலும், இதுவரை லாபத்தை கொடுக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
அதே சமயத்தில் ரூ. 65 கோடிக்கும் மேல் வசூல் செய்து வரும் துணிவு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது என்றும், இதற்கு முன் வெளிவந்த அணைத்து அஜித் படத்தின் வசூல் சாதனையை துணிவு படத்தின் வசூல் முறியடித்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
இது தான் அஜித்தின் திரை வாழ்க்கையில் ஆல் டைம் பெஸ்ட் வசூல்.