நடிகை அஞ்சலி
தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சலி. இவர் தற்போது படங்களில் மட்டுமின்றி வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை படம் உருவாகியுள்ளது. ராம் இயக்கியுள்ள இப்படத்தில் நிவின் பாலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் இன்னும் வெளிவராத நிலையில், அஞ்சலிக்கு இப்படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை உள்ளதாம். இப்படம் வெளிவந்தால் கண்டிப்பாக தன்னுடைய மார்க்கெட் உயரும் என்று அஞ்சலி நினைக்கிறாராம்.
சம்பளத்தை உயர்த்திய அஞ்சலி
இதனால் இப்படத்திற்கு பின் அஞ்சலி கமிட்டாகும் படங்களுக்கு தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி விட்டாராம். ரூ. 1 கோடி வரை நடிகை அஞ்சலி தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியுள்ளதால், தயாரிப்பாளர்கள் சற்று அதிர்ச்சியடைந்து வருகிறார்களாம்.
கடைசியாக அஞ்சலி நடிப்பில் வெளிவந்த தி ஃபால் வெப் சீரிஸ் கூட வெற்றிபெறாத நிலையில், ரூ. 1 கோடி சம்பளமாக கேட்பது தான் தயாரிப்பாளர்களின் அதிர்ச்சிக்கு காரணம் என பேசப்படுகிறது.