வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களுமே ஜனவரி 11ம் தேதி திரைக்கு வந்தன. அஜித் மற்றும் விஜய் இருவரும் நேருக்கு நேராக பல வருடங்கள் கழித்து மோதுகிறார்கள் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

மேலும் எந்த படத்திற்கு வசூல் அதிகம என்கிற பிரச்னை வரும் என்பதும் எல்லோரும் எதிர்பார்த்தது தான். இது பற்றி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

வாரிசு வசூல் 210 கோடியா?

வாரிசு படம் ஏழு நாட்களில் 210 கோடி வசூலித்து இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றனர். இது உண்மையான வசூல் விவரம் தானா என தற்போது விமர்சனம் எழுந்திருக்கிறது.

வாரிசு 210 கோடி வர வாய்ப்பே இல்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்து இருக்கிறார்.

வாரிசு vs துணிவு - வசூலில் இவ்வளவு தான் வித்தியாசம்! உண்மையை போட்டுடைத்த பிரபலம் | Varisu Thunivu Collection Difference

இவ்வளவு தான் வித்தியாசம்

மேலும் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்த திருப்பூர் சுப்ரமணியன் தனது தியேட்டரில் இரண்டு படங்களும் பெற்ற வசூல் பற்றி கூறி இருக்கிறார்.

“எனது தியேட்டரில் வாரிசு 63,79,933 ரூபாயும், துணிவு படம் 64,40,839 ரூபாயும் வசூலித்து இருக்கிறது. இரண்டுக்கும் வெறும் 60 ஆயிரம் தான் வித்தியாசம். இதுவும் ஷோ எண்ணிக்கை வித்யாசத்தால் தான் வந்தது. அதனால் இரண்டு படங்களும் நிஜத்தில் சம அளவு தான் வசூலித்து வருகிறது” என திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்து இருக்கிறார்.

வாரிசு vs துணிவு - வசூலில் இவ்வளவு தான் வித்தியாசம்! உண்மையை போட்டுடைத்த பிரபலம் | Varisu Thunivu Collection Difference

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here