கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தமிழில் அடுத்ததாக மாமன்னன் படம் உருவாகி வருகிறது.
அதுமட்டுமின்றி சைரன், ரகு தாத்தா ஆகிய படங்களையும் கைவசம் வைத்துள்ளார். அந்த வரிசையில் தற்போது புதிய படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
அப்படத்தின் First லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ரிவால்வர் ரீட்டா என தலைப்பிட்டுள்ள இப்படத்தின் First லுக் போஸ்டரை நடிகை சமந்தா வெளியிட்டுள்ளார்.
First லுக்
கதையின் நாயகியாக கீர்த்தி நடிக்கும் இப்படத்தை கே. சந்துரு என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் First லுக் போஸ்டரில் தனது கையில் இரு துப்பாக்கிகளுடன் போஸ் கொடுத்துள்ளார் கீர்த்தி.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் விக்ரம் படத்தில் வரும் கமல் போலவே செம மாஸாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ் என கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த First லுக் போஸ்டர்..