நடிகை சமந்தா

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக யசோதா திரைப்படம் வெளிவந்தது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலிலும் சக்கபோடு போட்டது.

இதை தொடர்ந்து அடுத்ததாக சமந்தா நடிப்பில் சகுந்தலம் எனும் திரைப்படம் வருகிற பிப்ரவரி 17ம் தேதி வெளியாகிறது. அண்மையில் வெளிவந்த இப்படத்தின் ட்ரைலர், படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

நடிகை சமந்தாவா இது! திருமண கோலத்தில் வெளிவந்த புகைப்படத்தை பாருங்க | Samantha As Married Girl In Semmozhi Song

நடிகை சமந்தா தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கிய கால்காட்டத்தில் சில துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கூட ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

திருமண பெண்

மு. கருணாநிதி எழுத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி 2010ம் ஆண்டு வெளிவந்த பாடல் ‘செம்மொழியான தமிழ் மொழியா’. இந்த பாடல் வீடியோவை இயக்குனர் கவுதம் மேனன் இயக்கியிருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இப்பாடலில் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இதில் நடிகை சமந்தாவும் நடித்துள்ளார். ஆம், திருமணம் ஆகி வீட்டிற்கு வரும் மணப்பெண்ணை கோலத்தில் சமந்தா நடித்துள்ளார்.

அந்த காட்சியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

GalleryGalleryGallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here