நடிகர் தினேஷ்

தமிழ் சின்னத்திரையில் பலர் அருமையாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் இருப்பவர் தான் தினேஷ்.

இவர் மஹான், பிரிவோம் சந்திப்போம், புது கவிதை, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, நாச்சியார்புரம் என தொடர்ந்து விஜய் மற்றும் ஜீ தமிழ் சீரியல்களில் நடித்து வந்தார்.

பின் இடையில் இவர் எந்த தொடரும் கமிட்டாகவில்லை, மாறாக அவரைப் பற்றி ஒரு தகவல் மட்டும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

அதாவது அவரும் அவரது மனைவியும், நடிகையுமான ரச்சிதாவை விவாகரத்து செய்துவிட்டதாக பேசப்பட்டது.

மீண்டும் நடிக்க வந்த நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ்- எந்த சீரியல், டிவி தெரியுமா? | Actor Dinesh Back To Serials

புதிய தொடர்

தற்போது தினேஷ் புதிய தொடர் ஒன்று கமிட்டாகியுள்ளார். முதன்முறையாக சன் தொலைக்காட்சியில் சீரியல் நடிக்க இருக்கிறார். ராதிகா ப்ரீத்தி அவர்கள் தான் இதில் நாயகியாக நடிக்க இருக்கிறாராம்.

மற்றபடி தொடர் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here