நடிகை ஆலியா பட்
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆலியா பட். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
மேலும், தற்போது கர்ப்பமாக இருக்கும் ஆலியா பட்டின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளிவந்த ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
படங்களில் நடிக்க கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வரும் நடிகை ஆலியா பட், இன்ஸ்டாகிராம் மூலமாகவும் கோடியில் சம்பாரித்து வருகிறாராம்.
கோடியில் வசூலிக்கும் ஆலியா
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி விளம்பரங்களை பதிவு செய்யும் ஆலியா பட், அதற்கான கட்டணத்தை வசூலிக்கிறாராம்.
குறைந்தபட்சம் ரூ. 85 லட்சமும், அதிக பட்சம் ரூ. 1 கோடியும் நடிகை ஆலியா பட் வசூலித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் 68.5 மில்லியன் ஃபாலோவர்ஸ் கொண்டுள்ளார் நடிகை ஆலியா பட் என்பது குறிப்பிடத்தக்கது.