தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவரது அப்பா மற்றும் தாத்தா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்கள் இதோ.

ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் நடிக்க வந்து 12 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் பல முக்கிய நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடிப்பது மட்டுமின்றி ஹீரோயின் centric படங்களிலும் நடித்து வருகிறார்.

அவர் தமிழ் பெண் என ரசிகர்கள் எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கலாம், ஆனால் அவர் உண்மையில் தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவர். அவர் பிறந்தது, வளர்ந்தது சென்னை என்றாலும் அவரது அப்பா, தாத்தா போன்றவர்கள் தெலுங்கு சினிமாவில் நடிகர்களாக இருந்திருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பா, தாத்தா ஹீரோவாக நடித்தவர்களாமே! யார் என தெரியுமா? | Aishwarya Rajesh Cinema Family

சினிமா பின்னணி கொண்ட குடும்பம்

ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பம் சினிமா பின்னணி கொண்டது. அவரது தாத்தா அமர்நாத் தெலுங்கில் சில படங்களில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். அவர் ஹிந்தியிலும் ஹீரோவாக படம் நடித்து இருக்கிறாராம்.

அமர்நாத்தின் மகனான ராஜேஷும் நடிகராகி தெலுங்கு சினிமாவில் பல படங்கள் நடித்து இருக்கிறார். மலையாளத்திலும் வில்லனாக நடித்து இருக்கிறாராம்.

 

ராஜேஷ் – நாகமணி ஜோடிக்கு பிறந்த மகள் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் பிறந்து 8 வயது இருக்கும்போது அப்பா ராஜேஷ் மரணமடைந்துவிட்டார். அதற்கு பிறகு ஐஸ்வர்யாவின் அண்ணன்களும் விபத்தில் இறந்துவிட்டனர். அது பற்றி ஐஸ்வர்யா ராஜேஷே பேட்டிகளில் கூறி இருக்கிறார்.

 

ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பா, தாத்தா ஹீரோவாக நடித்தவர்களாமே! யார் என தெரியுமா? | Aishwarya Rajesh Cinema Family

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here